இருசக்கர வாகனகங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. தந்தை-மகள் பரிதாப பலி.! 3 பேர் படுகாயம்.!! - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே நடந்த விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியில், இருசக்கர வாகனங்கள் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியது. இந்த விபத்தில், ஒரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தந்தை, மகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்து இருந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த தந்தை, மகள் குறித்து விசாரணை செய்கையில், அவர்களின் பெயர் முருகன் மற்றும் முத்துலட்சுமி என்பது தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்த தகவல் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Sivakasi Near Two Wheeler Accident Father and Daughter Died 3 Injured 29 Sep 2021


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal