ரவுடிக்கு ‘VIP’ உபசாரம்...! வசமாக சிக்கிய சென்னை காவலர்கள்...! - 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்! - Seithipunal
Seithipunal


மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவருக்கு விதிமீறிய சலுகைகள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு சென்னை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற உள்துறை ஆய்வின் பின்னர், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் திருமுருகன், செல்லதுரை ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் பிறப்பித்துள்ளார்.காவல் உயரதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ரவுடி வெள்ளைக்காளியிடமிருந்து பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் உறுதியானதாக தெரியவந்ததால் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் ரவுடி வெள்ளைக்காளியை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றபோது பெரம்பலூர் பகுதியில் மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட கொட்டு ராஜா என்ற நபரை சில மாதங்களுக்கு முன்பு காவலர்கள் மோதல் துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொன்ற சம்பவமும் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VIP treatment rowdy Chennai policemen caught act 3 people suspended action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->