திண்டிவனம் அருகே கொடூரம்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரை சாலையில் படுக்கவைத்து சென்ற அவசரஊர்தி பணியாளர்கள்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் சேடன்குட்டை தெரு ஜெ.பி நகர் பகுதியை சார்ந்தவர் சிற்றரசு (வயது 50). இவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து பூரண நலன் அடைந்ததாக கூறி நேற்று மாலை திண்டிவனத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவரை வீட்டிற்கு அழைத்து செல்லாத அவசர ஊர்தி ஊழியர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவரது வீட்டு தெருமுனையில் சாலையோரம் படுக்கவைத்துவிட்டு அவசர ஊர்தி ஊழியர்கள் சென்றுள்ளனர். 

சிற்றரசு சாலையிலேயே படுத்து கிடந்த நிலையில், மிகவும் ஆபத்தான சூழலில் இருந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு துடிதுடித்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிற்றரசின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அங்கு வந்த உறவினர்கள் அவரை மற்றொரு வாகனத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அவசர ஊர்தி ஊழியர்கள் நோயாளியின் உறவினர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், அவரை சாலையில் படுக்கவைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram Tindivanam Ambulance Workers Through Covid Recover Patient on Chennai Trichy NH Road


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->