விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி வதந்தியா? வெளியான அதிர்ச்சி தகவல்!
Vijayakanth health news
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்க்கு இருமல், மார்பு சளி காரணமாக நேற்று முன்தினம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவர் 3 வது நாளாக இன்று சிகிச்சை பெற்று வருவதாகவும் செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனதலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வெளியான செய்தி தவறானது. இதனை யாரும் நம்ப வேண்டாம் இது போன்ற வதந்திகளை யாரும் பரப்பவும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.