சிக்னலில் நிற்காமல் சென்ற விஜய்க்கு ரூ.500 அபராதம்.!! - Seithipunal
Seithipunal


விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான சந்திப்பிற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து பனையூர் அலுவலகத்திற்கு நடிகர் விஜய் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு புறப்பட்டார். அவர் தனது கருப்பு நிற இனோவா காரில் புறப்பட்டது முதல் அவருடைய ரசிகர்கள் விஜய் பயணித்த காரை பின்தொடர்ந்து வந்தனர். 

இந்த நிலையில் பனையூருக்கு முன்பாக இருந்த போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்த நிலையில் விஜய் பயணித்த கார் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் விதிகளை மீறி சென்றது. அவரைத் தொடர்ந்து வந்த விஜயின் ரசிகர்களும் சிக்னலின் நிற்காமல் சென்றனர்.

அந்த சமயத்தில் வாகனங்கள் ஏதும் குறுக்கே வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் விஜயின் கார் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்றதால் அவருக்கு ரூ500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay fined Rs 500 for violating traffic rules


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->