ஹெல்மெட் அணியாத போலீசாரை  லெஃப்ட் ரைட் வாங்கிய நபர்.! ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல், இவர் தனது மகன் மற்றும் மகனின் நண்பனை பின்னால் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். அந்த சமயத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசார் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த  ராஜவேலைத் தடுத்த கவத்துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

போலீசார் விதித்த அபராத்தால் கோபமடைந்த ராஜவேலுவின் மகன் தனது செல்போனில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை விடீயோ எடுத்துள்ளான். அப்போது அவரைக் கண்டித்த காவல் ஆய்வாளர் மதனலோகன். இதையடுத்து அவரிடம் இருந்து செல்போனை வாங்கியுள்ளார். 

இப்படி ராஜவேலும் காவல் ஆய்வாளர் மதனலோகனும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் கள்ளச்சாராயம் விற்ற இரு நபிகர்களை நபரை கைது செய்து கொண்டு இரு போலீசார், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட ராஜவேலுவும் அவரது மகனும், காவல் துறையினர் மட்டும் தலைக்கவசம் அணியாமல் செல்லலாமா? என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

இதையடுத்து, ராஜவேலு அவரது மகன், மகனின் நண்பன் என மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் போலீசார் சென்றது ஏன் என்பது தொடர்பாக காவல் ஆய்வாளர் ராஜவேலுக்கு விளக்கம் அளித்தார்.

அப்படி ராஜவேலுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஆவேசம் அடைந்த ஆய்வாளர் மதன லோகன், காவல் துறையினர் ஆகிய தாங்கள் செத்தாலும் பரவாயில்லை, பொது மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே எங்களில் நோக்கம் என ராஜவேலு அவரது மகன் உள்ளிட்ட மூவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இரவும் பகலும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக பணியில் இருக்கும் காவல்துறையினர் முதல் முதல், பொதுமக்கள் வரை அனைவரின் உயிருக்கும் பாதுகாப்புக்கு தலைக்கவசம் மிக முக்கியம். எனவே யாராக இருந்தாலும் தலைக்கவசம் அணியாமல் விதண்டாவாதம் செய்வதை விட்டு விட்டு, இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிர்காக்க நாம் அனைவருமே பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore police drive a two wheeler without helmet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->