ரேஷன் அரிசி கடத்திய விசிக ஒன்றிய பொறுப்பாளர் கைது..!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் பொள்ளாச்சி செமணாம்பதி சோதனை சாவடியில் குடிமை பொருள் வழங்கல் துறை போலீசார் மற்றும் ஆனைமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் நான்கு மூட்டைகளில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து காரில் இருந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் ஆனைமலை, மக்கள் சக்தி நகரை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் என தெரியவந்தது.  இவர் ஆனைமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரேஷன் அரிசிகளை விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்றுள்ளார்.

மேலும் போலீசார் மேற்கொண்ட கிடுக்குபிடி விசாரணையில் கைது செய்யப்பட்ட சாதிக் பாஷா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆணைமலை ஒன்றிய பொறுப்பாளர் என்பது தெரியவந்தது. மேலும் தனது காரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வைத்திருத்துள்ளார். 

காரில் பிரஸ் என எழுதி இருந்தால் போலீசாருக்கு சந்தேகம் வராது என நினைத்து ரேஷன் அரிசி கடத்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஈடுபட்டு வந்த நிலையில் சோதனையின் பொழுது காவல்துறையினரிடம் சிக்கி உள்ளார். அவரை விடுவிக்க கோரி திமுகவை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சிலர் நீண்ட நேரம் போலீசார் உடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK executive arrested for smuggling ration rice


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->