மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு சேப்பாக்கம் தொகுதியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களை ஒவ்வொரு போட்டிக்கும் இலவசமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்கிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மாற்றுத்திறனாளிகள் நேரில் காண ஏற்பாடு செய்ய வேண்டும் என்று டிசம்பர் 3 இயக்க நிறுவனர் பேராசிரியர் தீபக் கோரிக்கை வைத்துள்ளார். 

அந்த கோரிக்கை ஏற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று 30 மாற்றுத்திறனாளிகளை சென்னை ஹைதராபாத் போட்டியை காண இன்று அழைத்துச் செல்கிறார்.

அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi send to 30 physical challengers watch CSK vs SRH match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->