தேனியில் அரங்கேறிய பெருங்கொடுரம்.. அடிமை எடுபிடிகளை....., கொந்தளிக்கும் உதயநிதி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உயிர் பலிகளும் அதிகரித்துள்ளது. தினம் தினம் உயரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

தேனி மாவட்டத்தை பொறுத்த வரையில் 5,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 63 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இந்த நிலையில், தேனியில் இறந்த பெண்மணியின் உடலை கொண்டு செல்ல அவசர ஊர்தி கொடுக்காததால், தள்ளுவண்டியில் எடுத்து சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. இது குறித்த விடியோவை, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரது ட்விட்டில், " தேனியில் கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காது தள்ளுவண்டியில் போட்டு அனுப்பியது துடைக்கமுடியாத களங்கமாகும். உன்னதமான நம் சுகாதார கட்டமைப்பை சிதைத்து தம் எஜமானர்கள் ஆளும் மாநிலங்களைப் போலவே சின்னாபின்னமாக்கிய அடிமை எடுபிடிகளை எடுத்தெறிந்தாக வேண்டும் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin angry about Theni Covid death Patient moved by hand cart


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal