நாட்றம்பள்ளியில் உலா வரும் காட்டுயானைகள் - பொதுமக்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


நாட்றம்பள்ளியில் உலா வரும் காட்டுயானைகள் - பொதுமக்கள் அச்சம்.!

தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எல்லைப் பகுதியான திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரண்டு காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன.

உணவுக்காக தவிக்கும் அந்த யானைகள், தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து செல்வதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்த யானைகள் ஆந்திர எல்லைக்குட்பட்ட குப்பம் மல்லானூர் என்ற பகுதியில் இரண்டு பேரை காலால் நசுக்கி கொன்றுள்ளது.

இதுவரைக்கும் ஆந்திர எல்லையில் மட்டும் இந்த யானைகளுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் யானை தாக்குதலுக்கு பலியானார். 

அதன் படி மொத்தம் 6 பேர் இந்த யானைகளால் இறந்துள்ளனர். காட்டு யானைகள் அதிகளவில் கிராம பகுதிகளுக்கு வருவதால் தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளான திம்மம்பேட்டை, தகரகுப்பம், வீரனமலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வராது பாதுகாப்பாக உள்ளனர். 

இதற்கிடையே வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நாட்றம்பள்ளி அருகே ஊருக்குள் யானைகள் புகுந்திருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two wild elephants come to natrampalli village


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->