சிவகங்கை || தம்பதியினரிடையே தகராறு - ஆத்திரத்தில் வீட்டில் தீவைத்த கணவர்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வைத்தியலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ்-லதா தம்பதியினர். இவர்களுக்கு நவீன்குமார், ராஜேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தங்கராஜ் அடிக்கடி மனைவி லதாவிடம் தகறாரில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த பிரச்னையில் நவீன்குமார் தனது தாயாருக்கு ஆதரவாக இருந்துள்ளதனால் விரக்தியடைந்த தங்கராஜ் நேற்று அதிகாலை தன் மீதும், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி லதா மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீப்பற்றியதில், இருவரும் அலறி துடித்தனர்.

இந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து காப்பாற்ற முயன்ற நவீன்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து நவீன்குமார் 80% சதவீத தீ காயத்துடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், தம்பதியினர் இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died in sivakangai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->