காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார் - சாம்பாரில் விஷம் கலந்து 3 உயிரைக் கொன்ற மருமகள்.!!  - Seithipunal
Seithipunal


காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார் - சாம்பாரில் விஷம் கலந்து 3 உயிரைக் கொன்ற மருமகள்.!! 

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகே இளங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் - கொளஞ்சியம்மாள் தம்பதியினர். இவர்களுடைய மகன் வேல்முருகன். இவருக்கு  கீதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கொளஞ்சியம்மாள் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார். 

அந்த சாம்பாரை சுப்ரமணியன், கொளஞ்சியம்மாள் மற்றும் அவர்களது பேரன் உள்ளிட்டோர் சாப்பிட்டுள்ளனர். இவர்களுடன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரின் குழந்தைகள் இருவரும் இந்த சாம்பரைச் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் கொளஞ்சியம்மாளுக்கு திடீரெனெ வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அடுத்தடுத்து சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இருப்பினும், கொளஞ்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், சுப்ரமணியனும், பக்கத்து வீட்டு சிறுவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இரண்டு சிறுவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது, கொளஞ்சியம்மாள் வைத்த சாம்பாரில் வேல்முருகனின் மனைவி கீதா விஷம் கலந்தது தெரிய வந்தது. மேலும், கீதா விருத்தாசலம் புதுக்குப்பத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்ததும், இந்தத் தகவலை கொளஞ்சியம்மாள் தனது மகனிடம் தெரிவித்ததால், ஆத்திரத்தில் கீதா சாம்பாரில் விஷம் கலந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, கீதாவையும் அவருடன் கள்ளக்காதலன் ஹரிஹரனையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for murder case in viruthacfhalam


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->