அரசு பேருந்து ஓட்டுனரிடம் மதுபோதையில் தகராறு - கல்லூரி மாணவர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்து ஓட்டுனரிடம் மதுபோதையில் தகராறு - கல்லூரி மாணவர்கள் கைது.!

சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் நோக்கி நேற்று மாலை மாநகர பேருந்து பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தில் ஏறிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் மதுபோதையில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் விதமாக ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேருந்து திருமங்கலம் 100 அடி சாலை அருகே வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் மாணவர்களைச் சத்தம் போடாமல் படிக்கட்டில் இருந்து உள்ளே வருமாறு கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கி விட்டு தப்பியோடினர். இதைப்பார்த்த பயணிகள் சிலர் தப்பி ஓடிய மாணவர்களில் இருவரை மட்டும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் பயணிகள் காயமடைந்த ஓட்டுநரை சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே போலீஸார் பிடிபட்ட மாணவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படிக்கும் தீபக் மற்றும் எம் ஏ .தத்துவவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தர்மா என்பதும், மாணவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து போலீஸார் மாணவர்கள் இருவர் மீதும், கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் தப்பி ஓடிய சில மாணவர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two college student arrested for attack bus driver in chennai koyambedu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->