நடுநிலை.,கள் எங்கே?..! இரண்டு நாட்களாக நீதி கேட்கும் வன்னியர்கள்.. வீதியில் இறங்க வேண்டுமா?..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி. அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் சரஸ்வதிக்கு நீ என்னை காதலிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தெரிந்துகொண்ட குடும்பத்தினர், சரஸ்வதிக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து நிச்சயிக்கப்பட்ட நிலையில், இதன்பின்னரும் கொடூரன் ரங்கசாமி தொல்லை தொடர்ந்திருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி காலை சரஸ்வதி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில், வீட்டு வாசலில் பிணமாகக் கிடந்திருக்கிறார். கொலைக்கான காரணம் தெளிவாகத் தெரியாத நிலையில்  மர்ம மரணம் என காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். 

காவல்துறையினரின் விசாரணையில், ஏப்ரல் 2 ஆம் தேதி காலை சரஸ்வதியை அவரது வீட்டுக்கு அருகில் ரங்கசாமி வழிமறித்து தம்மை  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார். அவருடன் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி, நண்பர் ரவீந்திரன் ஆகியோரும் சரஸ்வதியை மிரட்டியுள்ளனர். 

ஆனால், அதை ஏற்காத சரஸ்வதி, ரங்கசாமியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி, கிருஷ்ணசாமி, ரவீந்தர் ஆகிய மூவரும் சரஸ்வதியின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்து, உடலை அவரது வீட்டு வாசல் முன் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் மூவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த கொலை அப்பட்டமாக நாடகக்காதல் தொல்லையால் அரங்கேறியுள்ள நிலையில், இதனைக்கண்டு எந்த பெண்ணிய உரிமையாளர்களிடம், புரட்சியாளர்களும் பொங்கியதாக தெரியவில்லை. மேலும், இந்த கொலை வடமாவட்ட மக்களுக்கு புதிதானதும் கிடையாது என்பது தான் வலியை மறைக்க முடியாத நிதர்சனம். 

பெண்ணொருவரை விரட்டி விரட்டி பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து, அவரை கொலை செய்ய துணிந்துள்ள கும்பலின் அட்டூழியம் இன்று வரை தொடர்கதையாவது வடமாவட்ட மக்களிடயே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. வடமாவட்டத்தில் பரவலாக இருக்கும் வன்னியர் இன பெண்களை குறிவைத்து இக்கொலைகள் சட்டத்தின் போர்வையால் பாதுகாக்கப்படும் சில சமூக விரோத கும்பல் நடத்தப்படுகிறது. ஆம் அது தான் உண்மை. 

ஏனெனில், இது போன்று நாடகக்காதல் கும்பலால் பல பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இழந்துள்ளனர். அவற்றில் வெளி வந்த விஷயம் சில மட்டுமே. விழுப்புரம் பள்ளி சிறுமி நவீனா, கருவேப்பிலங்குறிச்சி திலகவதி என்று அந்த பட்டியல் தொடர்ந்துகொண்டே செல்லும். இதில், அந்த நாடக காதல் கும்பலால் மிரட்டப்பட்டு, பெண்ணின் புகைப்படத்தை மாபிங் செய்து பெண்ணொருவர் கடலூரில் தற்கொலை செய்துகொண்டதும், அவரது உறவினரும் பெண் இறந்ததால் தற்கொலை செய்ததும் அடங்கும். இதனைப்போலவும் பல குற்றங்கள். 

இதுபோன்ற நாடக காதல் கும்பல்கள் குறித்து விசாரணை செய்கையில், இவர்களை திட்டமிட்டு மூளைச்சலவை செய்து இதுபோன்ற காரியங்களில் செயல்பட ஈடுபடுத்தப்படுவதும் அம்பலமாகியுள்ளது. அவர்களும் ஒரு வித கொலைகார கூலிப்படை திட்டக்காரர்கள் போலத்தான். கூலிப்படை காசு கொடுப்பவர்களுக்காக கொலை செய்வார்கள். இவர்கள் காசுக்கு ஆசைப்பட்டு காதல் என்ற விஷயத்தை உபயோகம் செய்து பெண் வீட்டாரை மிரட்டுவார்கள், அடிபணியாத பட்சத்தில் கொலை செய்வார்கள். 

நாடக காதல் விஷயங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், அதற்கான பட்டறைகள் என்று இவர்களுக்கு பின்னணியில் இருக்கும் போலி புரட்சி கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் பல கொலைகளில் மேற்கூறிய கொலை ஒருவிதம் மட்டுமே. மற்றொரு விதம், பெண்ணை காதல் வலையில் ஏமாற்றி திருமணம் செய்து பெண் வீட்டாரிடம் மிரட்டி பணம் வாங்குதல், பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி 6 மாதத்தில் திருமணம் செய்து 6 மாதத்தில் நடத்தையில் சந்தேகம் என மனைவியை கொலை செய்து, அவ்வழக்கில் இருந்து ஒருவரிடத்தில் வெளியே வந்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கிடைத்த பணத்தை வைத்து வாழ்க்கையில் செட்டில் ஆகுவது., இதுபோல பல விஷயங்களை சொல்லலாம்.

மேலும், காதலித்து ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை கொலை செய்து, பழியை பெண் வீட்டார் மீது சுமத்தி ஆதிக்க சாதி கொலை, ஆணவக்கொலை என்று கூறி வெளியே தன்னை காதல் காப்பான் போலவும், பெண்ணிய சமத்துவவாதி போலவும் காட்டிக்கொண்டு இருதரப்பு மோதலை ஏற்படுத்தி அரசியல் இலாபம் சம்பாரித்தல் என்று இது மற்றொரு ரகம். மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பெண்களை பயன்படுத்தி, இவர்களே பாகுபாடு பிரித்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இத்தகைய சமூக விரோத செயல்களை செய்து வருகிறார்கள். இவர்களின் கற்பனையால் உருவாக்கப்பட்ட பல ஜாதி தீண்டாமைகள் இன்று வெளிப்படையாக நடப்பதற்கு இவர்களின் இன்றைய செயல்பாடுகள் மட்டுமே முழு காரணம்.

இவை அனைத்தும் திரைப்படத்தில் நாம் பார்க்கும் படங்களை போல இருந்தாலும், அவை உண்மையிலும் நடந்து வருகிறது என்பது தான் கசப்பான உண்மை. விஷயம் அறியா பல திரைத்துறை இயக்குனர்களும் ஆணவ கொலை என்றால் கொந்தளித்து வருவார்கள் உண்மை தெரியாமல். உண்மை தெரிந்த பின்னர் நான் கூறிய கருத்தை அறிந்து மனம் அடைகிறேன் என்று ஒரு மன்னிப்பு கூட இருக்காது. அதற்குள் இவர்கள் சார்ந்த ஊடகங்களும் பெண் தரப்பை தீவிரவாதி போல அடையாளம் காண்பித்து வருமானம் பார்ப்பார்கள். உண்மை வந்ததும் அது குறித்து ஒரு செய்தி கூட இருக்காது. இவர்களலால் அரங்கேறிய கொலைகள், கற்பழிப்புகள், பாலியல் சீண்டல்கள் என எத்தனை குற்றங்கள். 

பல காதல் திருமண மனைவி நடத்தை சந்தேக கொலைகளுக்கு பின்னால் உள்ள அரசியல் இங்கு எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டால் விரலை விட்டு எண்ணிவிடலாம். பாதிக்கப்பட்ட தரப்பை தவிர உண்மை வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை என்பதே நிதர்சனம். நாடக காதலால் ஏமார்ந்து திருமணம் செய்யும் பெண்கள் ஒவ்வொரு நாளும் காதல் கணவனின் வீட்டில் அனுபவிக்கும் கொடூரத்தை இங்கு காட்சிப்படுத்தத்தான் ஆட்கள் இல்லை. 

காதலால் ஏமார்ந்த பெண் அவளது காதல் கணவரின் வீட்டில் கொலை செய்யப்பட்டாலும், ஆணவ கொலை என்று சுட்டிக்காட்டி வீறுகொண்டு வரும் பெண்ணிய உரிமையாளர்கள், சமத்துவ வியாதிகள், போலி புரட்சியாளர்கள் யாரும் மேலே உள்ள சரஸ்வதிக்கும், திலகவதிக்கும், நவீனாவிற்கும், இன்னும் பல பெண்களுக்கும் ஆதரவாக குரல் கொடுக்க கூட வரவில்லை. இதுபோன்ற போலி சமத்துவங்கள் இருதரப்பு மோதலை ஏற்படுத்தி பெரும் அழிவை ஏற்படுத்த இருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை. எத்தனை பெண்களின் கொலைகள் மறைக்கப்பட்டு இருக்கும் என்பது இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார்களுக்கு மட்டுமே தெரிந்தது. 

இவர்கள் பேசும் போலி சமத்துவம் பல மோதலை ஏற்படுத்தி இருந்தாலும், பெண்களை இறந்தவனின் பரிதவிப்பு எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் நினைத்து பார்க்க வேண்டும். சாமி தான் தண்டிக்கும், சட்டம் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று இருப்பவர்கள், சட்டத்தையும் சாமியையும் தன்னதாக்க அல்லது அதனை கையில் எடுத்தால் நிலை என்னவாகும் என்பது அது நடந்தால் மட்டுமே தெரியும். இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்காமல், காவல் துறையும் சட்டமும் இதுபோன்ற நாடக காதல் கும்பல்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டுமே இனியும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்கும் என்பதே பாதிக்கப்பட்டோரின் நிலைப்பாடாக இருக்கிறது. 

காலம் ஒரு சிறந்த மருந்து. விதைப்பதை கட்டாயம் அறுவடை செய்ய வைக்கும்.. அதற்கான காலம் வரும் போது கட்டாயம் நீதி தனக்கு தெரிந்த வழியில் கட்டாயம் வெற்றியை அடையும். அந்த வழியை அடையும் போது ஏற்படும் தடைகள் தகர்க்கப்படும் என்பதே வாழ்வியல் முன்னோர்களின் நியதி. தனிமனிதனின் சுய இலாபத்திற்காக ஒரு சமூகமே மாற்று வழியில் சீரழிந்து சென்று கொண்டு இருக்கிறது. இதனை அறிந்து செயல்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று நின்றால், வருவதை நியாயமான முறையில் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.  

நீ படித்து முன்னேறி வா.. உனக்கு இழைக்கப்பட்ட துன்பங்களையும், துயரங்களையும் வேறு ஒருவருக்கு செய்யாதே. அனைவருக்கும் நல்லது நினை என்று சொல்கிறானோ அவனே உண்மையான தலைவன். அவன் சார்ந்த சமூகமே முன்னேறும். மாறாக வெளியுலகில் நியாயவாதி போலவும், திரைமறைவில் (உயர் ** *ண்** **லி., **வை வ**, இன்னும் பல..............................) என்று சொல்பவனின் பின்தொடர்பாளர்கள் எப்படிப்பட்ட எதிர்காலத்தை அடையப்போகிறார்கள் என்பது அவர்களின் வழியே முடிவு செய்யும். 

கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டர் தளத்தில் #JusticeForSaraswathi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து  வருகிறது. இதில், நாடககாதலால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள், சொந்தங்கள், சில மனசாட்சியுள்ள நபர்கள் என்று பலரும் பெண்ணின் மரணத்திற்கு நியாயம் கேட்டு வரும் நிலையில், தங்களை பெண்ணிய போராளிகளாகவும், அவர்களின் விடுதலைக்காக பாடுபடுகிறோம் என்று வெற்று அறிக்கையிலும், பதிவிலும் கம்பு சுத்திய போலி போராளிகளையும் எங்கே என்று கேட்டு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான பதிவுகள் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன டேக்கை பார்த்து, எங்கோ உள்ளவர்கள் கூட சரஸ்வதி கொலைக்கான நியாயம் கேட்டு ட்விட் பதிவு செய்கிறார்கள். இங்குள்ள போலி புரட்சியாளர்கள்..,?...

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter Handlers Want Kallakurichi Ulunthurpet Vanniyar Girl Sarawathi Murder due to Drama Love Justice 17 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal