நாகையில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கான இடம் மாற்றம் - எங்குத் தெரியுமா?
tvk leader election campaign place change in nagai
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 'மக்கள் சந்திப்பு பிரசாரம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த பிரசாரம் சனிக்கிழமை நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், விஜய் நாளை 2-கட்ட பிரசாரத்தை நாகையில் மேற்கொள்கிறார். இதற்காக கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் தமிழக வெற்றிக்கழகத்தினர் போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர்.

இதையடுத்து புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய மாவட்ட காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கான இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புத்தூர் ரவுண்டானாவில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதியளித்த நிலையில், அண்ணா சிலை அருகே உரையாற்ற த.வெ.க.வினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அந்தக் கோரிக்கையை அடுத்து புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்ற காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
English Summary
tvk leader election campaign place change in nagai