தமிழக மீனவர்கள் கைது - நிரந்தர தீர்வு வேண்டி டிடிவி தினகரன் ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்ட்வீட்.

அதில், “வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டுவதாக கூறி, தாக்குதவது, கைது செய்வது, படகுகளை சிறைபிடிப்பது என இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. 

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, புதுக்கோட்டை மட்டுமல்ல அனைத்து மாவட்ட மீனவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதனுடன், வருங்காலங்களில் எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran tweet about tamilnadu fishermans arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->