பெற்றோரை ஜெயில் வாசலில் நிறுத்திடாதீங்க - டிடிஎஃப் வாசன் தயார் பேட்டி.! - Seithipunal
Seithipunal


இந்திய சாலைகளில் விலையுயர்ந்த வெளிநாட்டு பைக்குகளை வாங்கி, அதிவேகமாக ஓட்டுவதும், சாகசத்தில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டவர் டிடிஎஃப் வாசன். அதனை தனது யூ டியூப்பில் பதிவேற்றுவதன் மூலம் பணம் பார்த்து வந்த இளைஞரை லட்சக்கணக்கான சிறுவர்கள் பின்தொடர்கின்றனர்.

அதன் படி, சாலை விதிகளை மீறி சாகசம் செய்து வந்த இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர் கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த சம்பவத்தால், சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த வாசன் நேற்று நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அப்போது, வாசனின் தயார் சிறை வாசலுக்கு வந்து மகனை கூட்டிச் சென்றார். பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று வாசலிலேயே உட்கார வைத்து தலைகுளிக்க வைத்து உள்ளே அழைத்துச் சென்றார்.

இதயத் தொடர்ந்து, வாசனின் தயார் அங்கு கூடிய செய்தியாளர்களிடம் பேசுகையில், "பெற்றோரை இதுபோல் காவல்நிலையம், கோர்ட் மற்றும் ஜெயில் வாசலில் கொண்டு வந்து நிறுத்தி விடாதீர்கள்" என்று பேசியுள்ளார். தற்போது இந்தப் பேட்டி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttf vasan mother press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->