கர்நாடக முழுவதும் பதற்றம்! அடித்து நொறுக்கப்படும் தமிழக லாரிகள்! சம்மேளனம் விடுத்த திடீர் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் நாளை காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முழு அழைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதல் கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பெங்களூர் நகரில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் லாரி ஓட்டுனர்களும் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாக சம்மேளனம் அறிவுறுத்திருந்த நிலையில் தற்போது கர்நாடக வழியாக செல்லும் லாரிகளும் இயக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழக எல்லையான அத்திப்பள்ளியிலேயே தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அனைத்து லாரிகளிலும் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடக வழியாக திரும்பும் லாரிகளையும் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சமய தலைவர் தன்ராஜ் தெரிவித்துள்ளார். 

மேலும் கர்நாடகாவில் உள்ள தமிழ்நாடு பதிவில் கொண்ட லாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக மாநில அரசுக்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் தன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு பதிவு எண் கொண்ட லாரி ஓட்டுனர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Truck owners association warning not to ply Lorry through Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->