ஆகஸ்ட் 1 முதல் 31ஆம் தேதி வரை நீடிக்கப்படும் திருச்சி- தாம்பரம் விரைவு சிறப்பு ரெயில்! - தெற்கு ரெயில்வே - Seithipunal
Seithipunal


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது,"திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரெயில் (எண்: 06190/06191) இருமாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக.1 முதல் ஆக.31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கச்சேகுடாவில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரெயிலும் (எண்: 07191) மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு கச்சேகுடா செல்லும் ரெயிலும் (எண்: 07192) ஆக.18 முதல் ஆக.20-ந் தேதி வரை பண்ருட்டியில் ஒரு நிமிஷம் தற்காலிகமாக நின்று செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TrichyTambaram Express Special Train extended from August 1 to 31 Southern Railway


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->