துபாயில் இருந்து ரூ.59 இலட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திய 2 வாலிபர்கள் கைது..! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

துபாய் நாட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம், திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வந்திறங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். 

இதன்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நபர்களை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர்கள் பேஸ்ட் வடிவத்தில் 555 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், இதன் மதிப்பு ரூ. 26.29 இலட்சம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைப்போல, விமானத்தில் வந்த மற்றொரு பயணியிடமிருந்து 697.5 கிராம் எடையுள்ள ரூ. 33.04 இலட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவர்கள் கும்பகோணம் பகுதியை சார்ந்த சூர்ய பிரகாஷ் மற்றும் கண்ணன் என்பது உறுதியானது. அவர்களை கைது செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மொத்தமாக ரூ.59 இலட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy Airport Authorities Arrested 2 Youngster Smuggling Gold From Dubai 5 Oct 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->