போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்: தலைமை அலுவலகம் முன்பு குவிந்த போலீசார்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்கிறார்கள். 

இன்று தமிழக முழுவதும் போக்குவரத்து துறையின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என நேற்று மாலை அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

20க்கும் மேற்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை 11 மணிக்கு மேல் முற்றுகையிட உள்ளனர். 

தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும்  தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இரண்டு துணை ஆணையர் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் தலைமை அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு குறிப்பிட்ட இடத்தை போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

தடையை மீறி மறியல் ஈடுபடுபவர்கள் அலுவலகத்திற்கு உள்ளே முற்றுகையிட சென்றால் கைது நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transport workers strike Police gathered head office


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->