ரயில் பயணிகளே உஷார்...! குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் சேவையில் திடீர் மாற்றம்...! - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரம் கோட்டப் பகுதியில் பல்வேறு பொறியியல் பராமரிப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், திருச்சி வழியாக இயங்கும் சில ரெயில் சேவைகளில் தற்காலிக பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (வண்டி எண்: 16128), இன்று முதல் 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 25 மற்றும் 26-ந் தேதிகள் வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ரெயில் வழக்கமாக செல்லும் எர்ணாக்குளம், சேர்த்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிப்பாட் சந்திப்பு நிலையங்களை தவிர்த்து, கோட்டையம், சங்கனாசேரி, திருவல்லா மற்றும் செங்கனூர் வழியாக பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் முன்கூட்டியே தங்களது பயண திட்டங்களை சரிபார்த்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Train passengers beware Sudden change Guruvayur Chennai Egmore Express service


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->