சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: ரூ.7.96 கோடி நிலுவை அபராதம் வசூல்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் நிலுவையில் இருந்து ரூ.7.96 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை.

இதைத்தொடர்ந்து 3 நாட்கள் 156 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 93 வழக்குகள் உட்பட 8,613 வழக்குகள் தீர்வு காணப்பட்டு இணையதளம் வாயிலாக ரூ.38 லட்சத்து 31 ஆயிரத்து 500 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

மேலும் கடந்த 5 மாதங்களில் நிலுவையில் இருந்து சுமார் 1,90,246 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.7 கோடியே 96 லட்சத்து 97 ஆயிரத்து 130 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் இது ஒரு துன்புறுத்தல் என்று பாராமல், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை செலுத்துவதற்கான விழிப்புணர்வு என்பதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Traffic Violation in Chennai Rs 7 Crore 96 lakhs Outstanding Fine Collection


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->