சென்னையின் முக்கிய பகுதியில் விதிக்கப்பட்ட அதிரடி தடை! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகை தர உள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலாத் தல வளாகத்தினுள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இந்தியா-சீனா இடையே உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்காக, சென்னை  மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்துப் பேச உள்ளனர். 

சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி மோடி மற்றும் சீன அதிபர் வருகை தர உள்ளனர். மேலும், பல்லவ மன்னர் கால கலைச் சின்னங்களான மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை இருவரும் நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.

இதன்காரணமாக, கலைச்சின்னம் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக சுற்றுலாத் தலங்களான கடற்கரைக் கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களின் வளாகத்தினுள் செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று (அக்.8) முதல் அனுமதியில்லை என காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இந்த தடை உத்தரவானது இன்று முதல் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி முடியும் வரை தொடரும் மற்றும் மேற்கண்ட சுற்றுலாத் தல வளாகங்கள் தொல்லியல் துறையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

touristers not allowed in mahabaliuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->