பாதையாத்திரை நிகழ்ச்சியா? மரியாதையை செலுத்தும் நிகழ்ச்சியா? - Seithipunal
Seithipunal



கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. ராகுல்காந்தி பாதயாத்திரைகான் தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது.

 இந்த பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சி, மத்திய பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. 

இந்த பாதயாத்திரை, 3,570 கி.மீ. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள்,  மொத்தம் 150 நாட்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி, நடந்தே சென்று காஷ்மீரை அடைவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். 

பாத யாத்திரையில் பங்கேற்பதற்காக, நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ராகுல்காந்தி சென்னைக்கு வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் விடுதியில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும், ராஜிவ் காந்தி அங்கு நடைபெற்று வரும் வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் பங்கேற்று, பின்னர் அங்குள்ள நினைவிட நுழைவு வாயில் பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றுகிறார்.

பிறகு சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.40 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2.20 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். 

அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு மூலம், கடலின் நடுவே பாறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு சென்று மரியாதை செலுத்த இருக்கிறார்.

அங்கிருந்து படகு மூலம் மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்தி 3.50 மணிக்கு காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செய்ய இருக்கிறார். மாலை 4.10 மணிக்கு காந்தி மண்டபத்துக்கு சென்று அங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

அதன்பிறகு, ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணி அளவில் கலந்துக் கொண்டு தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today rajiv gandhi start pathayatra mk stalin start programme


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->