இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! 
                                    
                                    
                                   Today local holiday for thiruvarur district 
 
                                 
                               
                                
                                      
                                            இன்று (டிசம்பர் 5ம் தேதி) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று (டிசம்பர் 5ஆம் தேதி) அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய வரும் டிசம்பர் 10ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Today local holiday for thiruvarur district