தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து,கிராம் ரூ.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Gold Price decrease in Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->