இன்று நிதி ஆயோக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!
Today Finance Commission meeting MK Stalin participates
கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நிதி ஆயோக் செயல்பட்டு வருகிறது.இந்த நிதி ஆயோக் இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர் தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் நரேந்திரமோடியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்த இருக்கிறார். இதேபோல், பிற மாநில முதல்-மந்திரிகளும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க இருக்கின்றனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை இன்று சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.கூட்டம் நிறைவடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட இருக்கிறார்.
English Summary
Today Finance Commission meeting MK Stalin participates