தமிழகம் முழுவதும் இன்று 600 பூஸ்டர் டோஸ் மெகா தடுப்பூசி முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2 தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த பின் பூஸ்டர் டோஸ் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கடந்த ஜனவரி 10 தேதி முதல் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட 600 மையங்களில் இன்று நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today 600 booster dose vaccine camp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->