சபரிமலைக்கு செல்ல அரசு பேருந்துகள் வாடகைக்கு கிடைக்கும்! போக்குவரத்து துறை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுத்து செல்லு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து சென்று வருகின்றனர். 

இதன் காரணமாக தமிழக அரசு பேருந்துகளில் பக்தர்கள் 10க்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் அரசு விரைவு பேருந்துகளில் 10% கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதேபோன்று 40க்கும் மேற்பட்டோர் குழுவாக செல்ல முடிவு செய்தால் விரைவு சொகுசு பேருந்துகளை குறைந்த வாடகைக்கு எடுத்து செல்லலாம் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

அவ்வாறு குழுவாக சபரிமலைக்கு பயணம் மேற்கொள்வோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அல்லது விரைவு போக்குவரத்து கழக கிளைகளை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுக்க 94450 14424 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnstc buses are available on rent to go to Sabarimala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->