வலைதளத்தில் போலி பட்டியல் வெளியீடு.! டி.என்.பி.எஸ்.சி எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பொறியியல் பதவிக்கான தேர்வு முடிவுகள் குறித்து, சமூக வலைதளங்களில் வரும் போலி பட்டியல்களை நம்ப வேண்டாம்' என்று, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி நடைபெற்றது. 

இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டதாக, சமூக வலைதளங்களில் போலி பட்டியல் ஒன்று பரவி வருகிறது. இந்த போலி பட்டியலை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற பொய் தகவல்களை பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., நியமனங்கள் அனைத்தும், தேர்வு முடிவு தரவரிசைபடியே நடைபெற்று வருகின்றன. மேலும், அரசு வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி எச்சரித்துள்ளது. 

அதேபோல், டி.என்.பி.எஸ்.சி.,யின் அனைத்து தேர்வு முடிவுகளும் http:// www.tnpsc.gov.in, www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதில் மட்டுமே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tnpsc warned by fake result publish


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->