தமிழக கோயில் ஊழியர்களுக்கு புத்தாடைகள்... தமிழக அரசு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஜோடி புது சீருடைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள பூசாரி, அர்ச்சகர், பட்டாச்சாரியார் போன்ற பணிகளில் இருக்கும் ஆண்களுக்கு பருத்தி வேட்டியும், பெண்களுக்கு புடவையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதே போன்று கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் வரும் ஜன.10ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைக்க உள்ளார். கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஊழியர்களுக்கு வழங்கும் புத்தாடை மற்றும் சீருடைகள் குறித்தான விவரங்களை இந்து சமய அறநிலை துறை சார்பாக வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt announced new dresses for employees working in Temples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->