அடடா! காலை பொங்கல், மதியம் சிக்கன் கிரேவி, மாலை சூடான சுண்டல்! சொர்க்கமாகும் சிறைச்சாலை! - Seithipunal
Seithipunal


காலை பொங்கல், அவிச்ச முட்டை, 
மதியம் சிக்கன் கிரேவி, 
மாலை சூடான சுண்டல், டீ, 
இரவு சப்பாத்தி சென்னா...

அடடா மெனு லிஸ்ட் செம்மையா இருக்கே., எந்த ஊரு ஹோட்டல் மெனு இது என்றுதானே நினைக்கிறீங்க., 

ஹோட்டலுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு, நம்ம தமிழ்நாட்டு சிறை கைதிகளுக்கான மெனுங்க இது., 

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் சட்டத் துறை மானியக் கோரிக்கையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். 

அதில் குறிப்பாக, சிறை கைதிகளின் உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். 

அந்த அறிவிப்பு அறிவிப்போடு இல்லாமல், இன்று அமலுக்கு வந்துள்ளது. சென்னை புழல் மத்திய சிறையில் அமைச்சர் ரகுபதி இன்று கைதிகளுக்கு உணவு பரிமாறி இந்த  திட்டத்தை தொடங்கி வைத்தார். 

சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் புதிய உணவு பட்டியலின் படி,

காலை, மாலை இரு வேளையும் டீ,
இரண்டு நாட்களும் அசைவ உணவு,

காலை பொங்கல், அவிச்ச முட்டை, 
மதியம் சிக்கன் கிரேவி, 
மாலை சூடான சுண்டல், டீ 
இரவு சப்பாத்தி சென்னா ஆகியவை இந்த மெனுவில் இடம் பெற்றுள்ளன. 

ஏ க்ளாஸ் கைதிக்கான தினசரி உணவு செலவு ரூ.208
பி க்ளாஸ் கைதியின் தினசரி உணவு செலவு 135 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Jail Prison


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->