தகுதியானவர்கள் இருந்தும் கண்டுகொள்ளாத தமிழக அரசு.. அலட்சியத்தின் உட்சபட்சம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 8773 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தவிர மேலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடற்தகுதித் தேர்விலும், எழுத்துத் தேர்விலும் வெற்றி பெற்றிருந்தனர். 

அவர்களின் பெயர்கள் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தன. ஆனாலும், அந்த நேரத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 8773 என்ற அளவில் மட்டுமே இருந்ததால், அந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். தரவரிசையில் இடம்பெற்றிருந்த மீதமுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

காவல்துறை பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து, ஆள்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரை ஏற்படும் புதிய காலியிடங்களும், மொத்த காலியிடங்களில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் கூடுதல் எண்ணிக்கையில் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால், 2019 மார்ச் முதல் 2020 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட புதிய காலியிடங்கள் ஏற்கனவே இருந்த காலியிடங்களில் சேர்க்கப்படவில்லை. 

தமிழக காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு இருந்தும், இன்றைய சூழலில் காவலர்களின் தேவை அதிகமாக உள்ளது. இதற்காக காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருந்த இரண்டாம் நிலைக் காவலர்களை, பயிற்சி முடிவடைவதற்கு முன்பே  களப்பணியில் தமிழக அரசு ஈடுபடுத்தியது. 

மேலும், இன்றைய சூழலில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை உடனடியாக நிரப்புவது சாத்தியமில்லை. அதற்கு கொரோனா நோய்ப்பரவல் அச்சம் இடம் கொடுக்காது என்பதால், ஏற்கனவே உடற்தகுதி தேர்விலும், எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ள 10 ஆயிரத்துக்கும் கூடுதலான இளைஞர்களை நேரடியாக காவலர் பணியில் நியமிக்க தமிழக அரசு முன்வந்தால், அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt try to Posting for Police


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal