உணவுத்தரம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸாப் எண் - தமிழக அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


உணவுத்தரம் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸாப் எண் - தமிழக அரசு அதிரடி.!

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தமிழ்நாடு முழுவதும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, அதிகாரிகள் எளிதில் கெட்டுபோகக்கூடிய உணவுகளான ஷவர்மா, இறைச்சி உள்ளிட்ட உணவுகள் குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அதில் 5,018 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், உணவு தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தமிழ்நாடு அரசு ‘வாட்ஸ் அப்’ எண் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "உணவு வணிகர்கள் உணவு தயாரிப்பு, சேமிப்பு உள்ளிட்டவைகளை தாங்களாகவே சுய மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான சரிபார்ப்பு படிவங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ஆய்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். உணவு வணிகர்கள் மற்றும் உணவினை கையாளுபவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

உணவு வணிகர்களின் சங்கங்களுக்கு கூட்டங்களை நடத்தி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உண்ணத் தகுந்த உணவை தேர்வு செய்வது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உணவின் தரம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை நுகர்வோர் உணவு பாதுகாப்பு செல்போன் செயலி மூலமாகவும், 94440 42322 என்னும் 'வாட்ஸ் அப்' எண் மூலமாகவும் பதிவு செய்யலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt released whatsapp number for peoples complain food quality


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->