அதிகரித்த கொரோனா தொற்று.. மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், ஒரு சில மாநிலங்களில் மட்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இது கடந்த ஒரு வாரத்தில் அதிகபட்ச பாதிப்பாக உள்ளது. அதைப்போல கேரளாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், கொரோனா பாதிப்பில்லை என்ற பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பவர்கள் எந்த பிரச்சினையுமின்றி கர்நாடகாவிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt new order for quarantine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->