பொங்கல் பரிசு உண்டா? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும், நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000, மற்ற பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரூ.1,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பேரிடர் பகுதிகளில் நிவாரணம் வழங்குவதை காரணமாக வைத்து, மாநிலத்தின் மற்ற பகுதி மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால், பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு போலவே, ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்டவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்திலோ, ஜனவரி முதல் வாரத்திலோ வெளியிடப்பட்டு, ஜனவரி 2-வது வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government decide pongal gift provide january secind week


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->