ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர சட்டம் - அமைச்சரவை ஒப்புதல்..! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதியன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி, தமிழ்நாடு அரசுக்கு இணையவழி சூதாட்டத்தினை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. 

இக்குழு ஜூன் மாதம் 27 -ம் தேதி அன்று தனது அறிக்கையினை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. 

அதன்பின், இணையவழி விளையாட்டுகள் பள்ளி மாணவர்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை மூலமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

அந்தக் கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டி மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கு இணங்க இந்த அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு இந்த சட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு மிக விரைவில் அமல்படுத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government ban in online game


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->