கரூரில் புதிய பேருந்து நிலையம் எப்போது?. - தமிழக முதல்வர் பதில்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்டத்தில் நிறைவுற்ற பணிகள் திறப்பு, அடிக்கல் நாட்ட வேண்டிய புதிய பணிகள், மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. நீட் தேர்வு கடந்த 2010 ஆம் வருடம் திமுக - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு வேண்டாம் என்று போராடியது நாங்கள். அரசுப்பள்ளியில் பயின்ற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்று 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தற்போது கொண்டு வரப்பட்டது. 

மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு மூலமாக மருத்துவ கல்விக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும், அரசுப்பள்ளி மாணவர்கள் 40 பேர் மட்டும் மருத்துவ படிப்பிற்கு சென்றனர். இன்று அனைத்தையும் தகர்த்தெறிந்து, நான் கொண்டுவந்த இடஒதுக்கீடு சட்டத்தால் 41 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக மாறவுள்ளனர். 

கரூரில் பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு ஒருவர் தொடுத்துள்ளார். அந்த வழக்கு நிறைவடைந்து, தீர்ப்பு வந்தவுடன் கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Edappadi Palanisamy Speech about Karur New BusStand 16 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->