5-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க முடிவு.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. 18ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவை கூட்டம் கூடி அந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குவது வழக்கம். அதனடிப்படையில் இம்மாதம் 5ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. இதில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகிய இரண்டு படஜெட்டுகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Budget Cabinet Meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->