உயிரை மாய்த்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்! காரணம் சப்-இன்ஸ்பெக்டர் தான் - உருக்கமான பதிவு!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், பரணிபுத்தூரை சேர்ந்தவர் ரூபன் (வயது 40) இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவிகள், 4 குழந்தைகள் உள்ளனர். ரூபன் பைனான்சியில ஆட்டோ வாங்கி பணம் திருப்பி கட்ட முடியவில்லை என தெரிகிறது. 

இது தொடர்பாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் ரூபன் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு மீண்டும் போலீசார் அழைத்தனர். ஆனால் ரூபன் செல்லாமல் அவரது இரண்டாவது மனைவியான லீலாவதி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலைக்கு முன்னதாக ரூபன் அவரது செல்போனில் வீடியோ ஒன்று பேசி பதிவு செய்துள்ளார். அதில் அம்பத்தூர் போலீசார் என்னை விசாரணை நடத்தி கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். 

எனது தற்கொலைக்கு காரணம் சப் இன்ஸ்பெக்டர் என அவரது பெயரையும்  குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ரூபன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. அந்த வழக்குகளையும் சேர்த்து கைது செய்ய போவதாக போலீசார் மிரட்டி உள்ளனர். 

இதனால் ரூபன் அச்சமடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆட்டோ ஓட்டுனர் போலீசார் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvallur auto driver suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->