திருப்பூர் | ஸ்ட்ராங் ரூமில் ஏற்பட்ட திடீர் மின்தடை! பரபரப்பில் அரசியல் பிரமுகர்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மக்களவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி அரசு கலை கல்லூரியில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர், கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஸ்ட்ராங் ரூம் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

கல்லூரி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென சட்டமன்ற தொகுதி வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. 

சுமார் 25 நிமிடங்கள் மின்தடை நீட்டித்ததால் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. இதனை தொடர்ந்து அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் கல்லூரிக்கு சென்று மின் இணைப்பு வந்தவுடன் சிசிடிவி கேமராக்களை பரிசோதித்தனர். 

மழை காரணமாக மின்தடை ஏற்பட்டதாகவும் விரைந்து சரி செய்யப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் எல்.ஆர்.ஜி கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur strong room sudden power cut 


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->