தீண்டாமையில் மூழ்கிய திருப்பூர்: தலித் மக்கள் காலணி அணியத் தடை! - Seithipunal
Seithipunal


திருப்பூர், ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களில் உள்ள தலித் மக்கள் காலணிகள் அணியக்கூடாது என சாதிய ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்படுவது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக திருப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்த இரண்டு கிராமங்களில் தலித் மக்களை தாழ்வான முறையில் நடத்துவதாக குற்றம் எழுந்தது. 

மேலும் டீக்கடைகளில் தலித் மக்களுக்கு மட்டும் பேப்பர் கப்புகளை பயன்படுத்துவது, காலணிகள் அணிய தலித் மக்களுக்கு தடை விதிப்பது போன்ற தீண்டாமைக் குற்றங்கள் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பல ஆண்டுகளாக இந்த ஒடுக்கு முறைகள் இங்கு நடைபெற்று வருவதாகவும் மீறுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது. 

இது குறித்து பேசிய உடுமலைப்பேட்டை காவல் கண்காணிப்பாளர், இந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதற்காக காவலர்களை சாதாரண நிலையில் ஊருக்குள் அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் வருவாய் பிரிவு அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த 2 சாதியினருக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur Dalit people banned wearing shoes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->