8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! விடுதலையான வாலிபர்... தண்டனை பெற்றுக் கொடுத்து திருப்பூர் மகளிர் போலீஸ்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விடுதலையான வாலிபருக்கு திருப்பூர் மகளிர் போலீசார், தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தண்டாயுதபாணி(36). இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் சிறுமியை கொலை செய்யவும் முயற்சித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் தண்டாயுதபாணியை திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் தண்டாயுதபாணி விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கை எதிர்த்து போலீசார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கு தண்டாயுதபாணிக்கு 10 வருடம் சிறை தண்டனையும், கொலை முயற்சி செய்ததற்கு 10 வருடம் மற்றும் வீட்டினுள் அடுத்தமுறை நுழைந்ததற்கு 7 வருடமும் ஏக காலத்தில் சிறை தண்டனை அனுபவிக்குமாறு தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Womens Police gave the punishment to the youth who was freed in the POCSO case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->