10 மணிக்கு மேலே ஏன் கடையை திறக்கவில்லை?.... தனிப்பிரிவு காவல்துறையினர் மதுபானக்கடை ஊழியர்கள் மீது பாய்ச்சல்.! - Seithipunal
Seithipunal


புறவழிச்சாலையில் அமைந்துள்ள மதுபான கடையை இரவு 10 மணிக்கு மேல் திறக்க வேண்டும் என்று தனிப்பிரிவு காவல்துறையினர் பிரச்சனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி - திருச்செந்தூர், திசையன்விளை புறவழிச்சாலை சுங்கச்சாவடி அருகே மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் மீரான், பொன்னுதுரை மற்றும் கணேச ராஜா ஆகிய மூன்று பேர் பணியாற்றி வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு மூவரும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதன்போது, அங்கு வந்த நாங்குநேரி தனிப்பிரிவு காவல்துறையினர், மதுபான கடையை திறக்குமாறு கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஊழியர்கள் கடையை திறக்க மறுப்பு தெரிவித்த நிலையில், காவல் துறை அதிகாரிகள் மதுபானக்கடை ஊழியர்களின் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மூவரும் தங்கள் உறவினர்கள் மூலமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்ட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirunelveli Toll Plaza Police Argue with Tasmac Employees about Open shop after 10 PM


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->