எந்த சக்தியாலும் ''தமிழை'' நெருங்க முடியாது... - ராகுல் காந்தி பேச்சு.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 

தமிழ்நாடு மக்களை என்றும் அன்போடு நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாச்சாரம், வரலாறு மொழி போன்றவை என்னை ஈர்த்துள்ளது. 

தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது. பெரியாரைப் போன்ற பேராளிமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. 

காமராஜர், கருணாநிதி ஆகியோரை இந்த மண் தந்துள்ளது. தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடிய போது அவர்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. 

தமிழ் மொழி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருதப்படுகிறது. 

மத்தியில் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவோம். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களை மறந்து விட்டார். விவசாயிகளைப் போலவே மீனவர்களும் நாட்டிற்கு முக்கியமானவர்கள் தான். உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுக் கூட பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Rahul Gandhi speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->