அம்பாசமுத்திரம்: தவணை முடிந்தும் கிடைக்காத சீட்டுப்பணம்.. தற்கொலை செய்கையில் அரங்கேறிய பெருங்கொடூரம்.! - Seithipunal
Seithipunal


சீட்டுத்தொகையை தவணை முடிந்தும் தராததால், விரக்தியடைந்த தச்சு தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சிவந்திபுரம் பகுதியை சார்ந்த தச்சு தொழிலாளி பாலசுப்பிரமணியம். இதே பகுதியை சார்ந்தவன் மரிய செல்வம். மரிய செல்வம் சீட்டு நடத்தி வந்த நிலையில், இதில் கலந்துகொண்ட பாலசுப்பிரமணியம் தவறாமல் தனது பணத்தை கட்டி வந்துள்ளார். 

இந்நிலையில், தவணைத்தேதி முடிந்ததும் பாலசுப்பிரமணியம் தனது பணத்தினை கேட்டுள்ளார். பணத்தை இப்போது கொடுத்துவிடுகிறேன், அப்போது கொடுத்துவிடுகிறேன் என்று மரிய செல்வம் இழுத்தடித்து வந்துள்ளார். 

இதனால் விரக்தியடைந்த பாலசுப்பிரமணியம், கைகளில் பெட்ரோல் கேனுடன் மரிய செல்வத்தின் வீட்டிற்கு சென்று, பணத்தை கொடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார். இதனைக்கேட்ட கொடூரன் உன்னால் முடிந்ததை செய்துகொள் என்று திமிராக தெரிவித்துள்ளான். 

இதனையடுத்து பெரும் விரக்திக்கு உள்ளாகிய பாலசுப்பிரமணியம் பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்தில் அருகிலேயே இருந்த கொடூரன் மரிய செல்வம், தனது வாகனத்தை பாதுகாக்கும் பொருட்டு அதனை அப்புறப்படுத்தியுள்ளான். 

இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள், மரிய செல்வத்தின் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. பாலசுப்பிரமணியத்தை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லாது, அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விக்கிரமசிங்கபுரம் காவல் துறையினர், கல்நெஞ்ச கொடூரன் மரிய செல்வதை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Ambasamudram Balasubramaniyan suicide due to Chit Fund Fraud


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal