இனி சப்பாத்தி மாவு பிசைய கக்ஷ்ட பட வேண்டாம்… சப்பாத்தி மாவு மென்மையாக இருக்க சில  டிப்ஸ் பாக்கலாம்….! - Seithipunal
Seithipunal


இன்றைய அன்றாட வாழ்வில் இரவு உணவில் சோறு தவிர்க்கப்பட்டு டிபன் சாப்பிடுவது பழக்கமாக மாறி விட்டது. காரணம் வீட்டில் யாரேனும் ஒருவராவது சர்க்கரை நோயாளியாக உள்ளனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி செய்வது வழக்கமாக உள்ளது. இந்த பதிவில் சப்பாத்தி மாவு மென்மையாக இருக்க சில  டிப்ஸ் பாக்கலாம்….!


சப்பாத்திக்கு மாவு பிசையும் போது காய்ச்சி ஆற வைத்த பால் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் நன்றாக கலந்து சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி சுவையாக இருக்கும்

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

                                                            
சப்பாத்தி உருட்டும்போது எண்ணைய் ட்தேய்த்து அதனை நாலாக மடித்து உருட்டினால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.


சூடான பால் சிறிதளவு சேர்த்து மாவு பிசைந்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.



சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

சப்பாத்தி மென்மையாக இருக்க சப்பாத்தி மாவை கலக்கும் போது பேக்கிங் சோடா அரை தேக்கரண்டி சேர்க்கவும்.

சப்பாத்தி மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்தால், சப்பாத்தி மென்மையாகவும் உப்பியும் கிடைக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips for sappathi battar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->