திண்டிவனம் சிறையில் சாதி கொடுமை.. தற்கொலைக்கு முயன்ற அதிகாரி.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் பகுதியைச் சார்ந்தவர் பாரதி மணிகண்டன். இவர் திண்டிவனம் கிளை சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார். கடந்த வியாழக்கிழமை காலையில் பணியில் இருந்த பாரதி மணிகண்டன், அன்று இரவு பிளேடால் தனது இடது கை மணிக்கட்டை கிழித்து உயிருக்கு போராடியுள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக காவலர்கள், அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துமனையில் அனுமதி செய்தனர். இது குறித்து பாரதி மணிகண்டன் தெரிவிக்கையில், " காலையில் 9 மணி முதல் இரவு 7 மணி வரை நின்று கொண்டே பணி செய்ய வேண்டும் என்று சிலர் உத்தரவிட்டதால், மன உளைச்சலால் தனது இடது கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டதாக " தெரிவித்துள்ளார். 

மேலும், பணியில் இருக்கும் நான்கு பேர் சாதிய பாகுபாடு காண்பித்து, அவர்கள் பணியாற்றும் போது உட்கார்ந்து பணியாற்றுவதாகவும், நான் பணிக்கு வரும் போது மட்டும் கால்கடுக்க நின்று பணியாற்ற வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை மீறினால் உயர் அதிகாரிகளிடம் அவர்கள் அவதூறு தெரிவிப்பதாகவும் பாரதி மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tindivanam Sub Jail Prisoner suicide attempt due to caste comparison


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal