5 நிமிடத்திலேயே விற்றுத் தீர்ந்த ரெயில் டிக்கெட்டுகள் - அதிர்ச்சியில் தெற்கு ரெயில்வே.! 
                                    
                                    
                                   ticktes sales within five minutes for pongal festival
 
                                 
                               
                                
                                      
                                            ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயிலில் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு இரண்டு மாதங்களுக்கு முன்பாக தொடங்கும்.
அதன் படி அடுத்த ஆண்டு ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை, 15-ந்தேதி மாட்டுப் பொங்கல் , 16-ந்தேதி காணும் பொங்கல் உள்ளிட்டவைக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் அனைத்து ரெயில் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால், காலை 5 மணி முதல் கவுன்டரில் காத்திருந்த பயணிகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்தான் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய நாளையும் , ஜனவரி 12-ந்தேதிக்கு வரும் 14-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       ticktes sales within five minutes for pongal festival